நடிகர் அஜித் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வர இருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சேலத்தில் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .
தயாரிப்பாளர் சங்கம் போடும் தடை!சேலத்தில் நேர்கொண்ட பார்வை வெளியாவதில் சிக்கல்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் மற்றும் சேலம் ஏரியா வினியோகஸ்தர்களும் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன .
பொதுவாக சேலத்தில் பெரிய நட்சத்திரங்களான ரஜினி ,கமல் ,அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படத்திற்கு அதிக வசூலை அடைவதற்காக 65 ஸ்கிரீன்களில் திரைப்படம் வெளியிடப்படும் .
ஆனால் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு 45 ஸ்கிரீன்களில் மட்டுமே இனிமேல் திரைப்படத்தை வெளியிட முடியும் எனவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இதனால் நடிகர் அஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளிவர காத்திருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு சேலம் மாவட்டத்தில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது .
நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படம் பி, சி சென்டர்களில் மிகப்பெரிய வசூலை அள்ளியதால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை திரையிட பெரிய அளவில் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் . ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் எடுக்கப்பட்ட சில முடிவுகளால் தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டபடி இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .
ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை ஆலோசனை கமிட்டியில் உள்ள அனைவருமே தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் . மேலும் சேலத்தில் உள்ள விநியோகஸ்தர்களை விட சில முக்கிய புள்ளிகள் எடுக்கும் முடிவில் தான் எத்தனை ஸ்கிரீனில் படம் ரிலீஸ் ஆகும் என்பது முடிவு செய்யப்படும் என்று சிலர் கூறி வருகின்றனர் .
இதனால் சேலத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திட்டமிட்டபடி அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.