மனப்பிறழ்ச்சி அடைந்தவர்கள் என்றால் கேவலமா? அஜித்தின் நேர்கொண்ட பார்வைக்கு எதிராக கொந்தளிப்பு!

அஜித்குமார் நடித்து, வினோத் டைரக்‌ஷனில், போனிகபூர் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’ .


இந்த திரைப்படம் இந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தை தமிழில் நடித்து இருக்கிறார் நடிகர் அஜித்.

இந்த திரைப்படத்தில் வரும் ஒரு சில வசனங்கள் மற்றும் நடிப்பு ஆகியவை மன நலம் பாதிக்கப்பட்டவர்களை  இழிவுபடுத்துவதாக காணப்படுகிறது என பல அமைப்பாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை  திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

 சென்னையில் இயங்கிவரும்  'மைண்ட் மேட்டர்ஸ் சர்க்கிள்' என்ற அமைப்பினர் , மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சேவை செய்து வருகின்றனர் .  இந்த  அமைப்பின் முக்கிய உறுப்பினரான  எழுத்தாளர் சரவணராஜா, 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள்  தன்னுடைய கருத்துக்களையும் எதிர்ப்புகளையும்   சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் . 

இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்த பிங்க்  திரைப்படத்தில்  மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றி   வெகு சில கருத்துக்கள் தான் கூறப்பட்டிருக்கும் ஆனால் . அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவரை வன்முறையாளர்களாக சித்தரித்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத் கூடியதாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிகர் அஜித் இருமுனை பிறழ்உடையவராக நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் மாத்திரை டப்பாவிலிருந்து மிகவும் அதிகமான எண்ணிக்கையில் மாத்திரைகளை அள்ளி சாப்பிடுவது  போன்ற காட்சிகள் உள்ளன . இந்த காட்சிகள் ஒரு தவறான கருத்தை சமூகத்தில் பரவ வித்திடும்  என்றும் கூறியிருக்கிறார் சரவணராஜா .

எனவே இத்தகைய காட்சிகளை  நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தி சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு பல மனநல மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.