நேர்கொண்ட பார்வை வெற்றி! புது கெட்டப்பில் ரசிகர்களுக்கு அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.


ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் , வினோத்தின் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படம்  ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வந்தது . இந்தியில் மிகப் பெரிய ஹிட்டான பிங்க்  திரைப்படத்தின் ரீமேக் ஆன இந்த திரைப்படத்திற்கு தமிழ் திரையுலகிலும் பெரிய வரவேற்பு  கிடைத்துள்ளது . 

இந்நிலையில் நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு , புதிய கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் மூன்று பெண்களில் முக்கியமான கேரக்டரில் நடித்த நடிகை சிரத்தா சிறீநாத் உடன் நடிகர் அஜித் புதிய கெட்டப்பில்  இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .

அஜித்தின் புது கெட்டப்பில் வெளியான புகைப்படத்தை  கண்டு அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் .