சரத்பவார் மற்றும் அஜித் பவார் திடீர் சந்திப்பு! தொண்டர்கள் அதிர்ச்சி! பின்னணி என்ன?

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்று நேற்று பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோர் நேற்றைய இரவு திடீரென்று சந்தித்தனர்.


மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பாஜக கட்சியை சார்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பு வெளிவந்த சில மணி நேரங்களிலேயே தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் அஜித் பவார் தன்னுடைய துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் , சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே இருப்பார் என ஒருமனதாக முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் இல்லத்திற்கு அஜித் பவார் நேற்று இரவு வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரின் திடீர் சந்திப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிராவில் பல குழப்பங்களை ஏற்படுத்திய அஜித் பவார் , தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் பாஜகவுடன் உறவு வைத்திருந்ததன் பின்னணியில் சரத்பவாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தொண்டர்கள் குழம்பியுள்ளனர்.