கிழிந்த நைட்டி! கதறிய கைக்குழந்தை! ஒரே வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன் - மனைவி மற்றும் மைத்துனர்! சேலத்தை பதற வைத்த சம்பவம்!

சேலம் அருகே ஆக்ராவை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.


சேலம் மாவட்டம் பனங்காடு பெருமாகவுண்டனூர் பகுதியில் ஆக்ராவை சேர்ந்த ஆகாஷ் மற்றும் அவரது மனைவி வந்தனா கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்களுடன் சன்னி என்ற 15 வயது சிறுவனும் தங்கியிருந்தான்.

கடந்த ஞாயின்று இரவு 10 மாதக் குழந்தை நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்ததை கவனித்த அக்கம் பக்கத்தினர் என்னவென்று சென்று பார்க்கும்போது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே வந்தனா கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார். மேலும் வீட்டின் பின்புறத்தில் ஆகாஷ் மற்றும் சிறுவன் சன்னி ஆகியோரும் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அதே பகுதியில் தங்கியிருந்த 4 வடமாநில இளைஞர்கள் காணாமல் போய்விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த 4 பேரும் தப்பி ஓடியது பதிவாகி இருந்தது.

அவர்கள் ஆக்ராவை சேர்ந்த விவேக், தினேஷ், விஜி உள்பட 4 பேராகும். இவர்கள்தான் இந்த கொலையை செய்துவிட்டு தப்பி ஓடியதை போலீசார் உறுதி செய்தனர். வந்தனனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சேலம் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கொலையாளிகளான ஆக்ராவை சேர்ந்த விவேக், தினேஷ், விஜி ஆகிய 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர். தப்பி ஓடிய மற்றொரு நபரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்