திருமணத்திற்கு பிறகு முதல் முறை..! சன் டிவி அனிதா வெளியிட்ட முக்கிய தகவல்!

திருமணத்திற்கு பின்பு முதன்முதலாக அனிதா சம்பத் சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசித்தார்.


பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார் அனிதா சம்பத். தன்னுடைய அழகான தமிழ் உச்சரிப்பால் இளைஞர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார் அனிதா. இவருடைய அழகை ரசிப்பதற்காகவே இளைஞர்களின் செய்தி பார்க்கும் பழக்கம் அதிகமானது என்று தான் கூற வேண்டும்.

செய்திவாசிப்பாளர் பணியை தொடர்ந்து இவருக்கு சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சர்க்கார் , எந்திரன்-2 போன்ற திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக தோன்றியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் , யோகி பாபு போன்றோர் நடிக்கும் டேனி என்ற திரைப்படத்தில் அனிதாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியிருக்க கடந்த மாதம் அனிதா சம்பத் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின . அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தன . இதனை அறிந்த இளைஞர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்து அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியும் கூறிவந்தனர்.

இந்நிலையில் அனிதா சம்பத் திருமணத்திற்கு பின்பும் மீண்டும் தன்னுடைய செய்திவாசிப்பாளர் பணியை சன்நியூஸ் தொலைக்காட்சியில் துவங்கியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனிதா சம்பத்.