திடீரென மோதிய பறவை! தீப்பிடித்த என்ஜின்! சோளக் காட்டில் இறங்கிய விமானம்! நொடியில் 233 பேரை காப்பாற்றிய ஹீரோ பைலட்! நெகிழ வைக்கும் சம்பவம்!

ரஷ்ய நாட்டில் இருந்து புறப்பட்ட விமானமானது திடீரென்று கோளாறான போது பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.


ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோ. மாஸ்கோவிலிருந்து கிரிமீயா நாட்டிலுள்ள சிம்பெரோபொல் யூரல் நிறுவனத்தின் ஏர்பஸ் 321 என்ற விமானம் புறப்பட்டது. விமானத்தில் கிட்டத்தட்ட 233 பயணிகள் சென்று கொண்டிருந்தனர். பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானத்தின் மீது பெரிய பறவை ஒன்று மோதியது.

விமானத்தின் மீது பறவை மோதியவுடன் அனைத்து மின் விளக்குகளும் அணைந்தன. இதனால் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் பறக்கத் தொடங்கியவுடனே கருகல் வாசனை வந்துள்ளது. 

இதனால் விமானி அதிர்ச்சி அடைந்தார். விமானத்தைக் கீழே இயக்கும் கியர் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் கீழே இருந்த சோள வயலில் இறக்கினார். கீழே இறங்கியவுடன் என்ஜின்கள் தானாக அனைந்தன. பயணிகளுக்கு முதலுதவி அளிப்பதற்காக மருத்துவ உதவிகள் தயாரான முறையில் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்த அசம்பாவிதத்தில் கிட்டத்தட்ட 23 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.  இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதை ரஷ்ய அரசானது உறுதி செய்துள்ளது. அந்நாட்டு சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் விமானியை "நாட்டின் ஹீரோ" என்று புகழ்ந்து வருகின்றனர்.

விமானம் கீழே தரை இறங்கிய உடன் அனைத்து பயணிகளும் பேய் அடித்தது போல் அதிர்ச்சி அடைந்து இருந்தனர். இந்த சம்பவமானது மாஸ்கோ நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.