இணையதளத்தில் வைரல் ஆன ஆபாச படம்! நடிகை வசுந்தரா என்ன சொன்னார் தெரியுமா?

பிகைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்காக நடிகை வசுந்தரா காஷ்யப் முதல் முதலாக அளித்த நேர்காணல் ரசனைக்குரிய வகையில் இருந்தது


தென்மேற்குப் பருவக்காற்று பேராண்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் வசுந்தரா காஷ்யப். இந்தப் படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணே கலைமானே படத்திலும் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது நடிகர் விக்ராந்த்துடன் இவர் பக்ரீத் என்ற படத்தில் நடித்து வருகிறார் 

வசுந்தரா காஷ்யப் பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலின் கிஸ் மி ஹக் மி ஸ்லாப் மீ என்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர், தொகுப்பாளருக்கு பல்வேறு விளையாட்டு சவால்களைக் கொடுக்க அதனை செய்துகொண்டே தொகுப்பாளர் பேட்டி காணும் வகையிலான நிகழ்ச்சி அது 

அந்த வகையில் வசுந்தரா தொகுப்பாளருக்கு கொடுத்த சவாலான விளையாட்டு வாய்ப்புகள் பார்வையாளர்களைக் கவர்கிறது. தொகுப்பாளரின் தலையில் புத்தகங்களை கணக்கில்லாமல் அடுக்கச் செய்வது. அந்தப் புத்தகங்களை தவறவிடாமல் மீண்டும் அடுக்கச் செய்வது. இருக்கையில் தலைகீழாக படுத்துக் கொண்டு பாட்டுப் பாடச் சொல்வது, பத்மாசன நிலையில் பல்வேறு செயல்களைச் செய்யவைப்பது என  தொகுப்பாளரை வறுத்து எடுத்தார்.

அந்த சவால்களையும் செய்துகொண்டு பரிதாபத்துக்குரிய தொகுப்பாளர் பல்வேறு கேள்விகளைக் கேட்க அவற்றுக் அவர் அளித்த பதில்களும் சுவாரசியமானவையாகவும், குறும்பும் கும்மாளமுமாக இருந்தன. ஆனால் வசுந்தரா தொடர்பான ஆபாச படங்கள் வெளியான விவகாரம் குறித்து அவர் வாய் திறக்கவில்லை.