நடிகை வாணிஸ்ரீயின் குடும்பத்தை துரத்தும் துர் மரணம்..! 36 வயது மகன் திடீர் பலி..! அதிர்ச்சியில் உறவுகள்!

பிரபல பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தனது 36 வயதில் திடீரென மரணமடைந்துள்ளார்.


வசந்த மாளிகை, நிறைகுடம் , உயர்ந்த உள்ளம் போன்ற பல்வேறு பழம்பெரும் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாணிஸ்ரீ. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் ஆகியோருடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை வாணிஸ்ரீக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

நடிகை வாணிஸ்ரீ யின் மகன் பெயர் அபினய் வெங்கடேஷ கார்த்திக். 36 வயதாகும் இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் மருத்துவர் ஆவார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகனும், பிறந்து எட்டு மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் சொத்து பிரிப்பு விவகாரத்தில் குடும்பத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் கூட ஒருமுறை நடிகை வாணிஸ்ரீ அவர்கள் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு ஹோட்டலில் தங்கியிருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய் வெங்கடேஷ கார்த்திக் தனது 36 வயதில் நேற்று திடீரென மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் தந்தை தனது மகன் மாரடைப்பில் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் வேறு சிலரோ அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறிவருகின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து உயிரிழந்தவரின் தந்தை கருணாகரன் கூறுகையில் என் சிறு வயதிலேயே நான் என் அப்பாவை இழந்தேன். என் அண்ணன் ஒருவரும் 40 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது என்னுடைய ஒரே மகனும் மாரடைப்பில் போய்விட்டான் எனவும் அவர் கண்கலங்கி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.