இப்போ ஒருத்தர் கூட ரிலேசன்ஷிப்பில் இருக்கேன்..! குழந்தை பெத்துக்கனும்னா தான் கல்யாணம்..! இளம் நடிகை டாப்சியின் டாப்பான முடிவு!

பிரபல நடிகையான டாப்ஸியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன .


பிரபல நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து  மிகவும் பிரபலமாகி வருகிறார். இவர் முதல் முதலில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார்.

இதற்குப் பின் இவர் ஆடுகளம், காஞ்சனா என பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை அடித்தார். இதனை அடுத்து பாலிவுட்டில் நுழைந்த நடிகை டாப்ஸி, பிங்க் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார். இந்த திரைப்படத்தை அடுத்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதன் மூலம் எந்த மாதிரி கதாபாத்திரத்திலும்  தன்னால் சிறப்பாக நடக்க இயலும் என்பதை நிரூபித்து விட்டார் நடிகை டாப்ஸி. தற்போது நடிகை டாப்ஸி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் அப்போது பேசும்போது எப்போது நீங்கள் திருமணம் செய்து போர் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது

அதற்கு பதிலளித்த நடிகை டாப்ஸி , "தன்னுடைய திருமண பேச்சுவார்த்தை வீட்டிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது . இருப்பினும் நான் எனக்கு எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றுகிறதோ அப்பொழுது தான் திருமணம் என்று தீர்மானித்திருக்கிறேன் . மேலும் திருமண பந்தத்திற்கு பின்புதான் நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" எனவும் கூறியிருந்தார்.

இதுமட்டுமில்லாமல் நடிகை டாப்சி தான் ஒருவரை காதலித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். விரைவில் தான் காதலித்தவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தன்னுடைய திருமணம் ஒரே நாளில் முடிவடைய வேண்டும் எனவும் விரும்புகிறார் நடிகை டாப்ஸி.