கார்த்தியுடன் அந்த மாதிரியான உறவு! முதல்முறையாக மனம் திறந்த தமன்னா!

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா ஆவார் . இவர் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.


சில வருடங்களுக்கு முன்னால் நடிகை தமன்னாவும் மற்றும் நடிகர் கார்த்தியும் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன . இந்த செய்திகளை பெரிதும் கண்டுக்கொள்ளாத நடிகை தமன்னா தற்போது  இந்த செய்தியை பற்றி மனம் திறந்துள்ளார். நடிகை தமன்னா மற்றும் நடிகர் கார்த்தி பையா,சிறுத்தை மற்றும் தோழா படத்தில் இணைந்து நடித்துள்ளனர் . 

நடிகர் கார்த்தி என்னுடன் பணிபுரிந்த ஒரு நடிகர் மட்டுமே . அவர் எனக்கு  நண்பன் கூட கிடையாது. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பையா படத்தில் எங்கள் இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி ஆனது இது போன்ற வதந்தி பரவ காரணமாக அமைந்தது. யாரவது  ஏதாவது என்னை  பற்றி கூறினாள் நான் அப்படி செய்கிறேன் என்று அர்த்தமில்லை . உண்மையிலேயே  நான் யாரையாவது காதலித்தால் நானே மகிழ்ச்சியாக அதை என் ரசிகர்களுக்கு முதல் ஆளாக தெரிவிப்பேன் என்றும் நடிகை தமன்னா கூறியுள்ளார்.

நடிகை தமன்னா தற்போது தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் கைதி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.