இந்த பூனையும் பால்குடிக்குமா? ஒட்டுத் துணி இல்லாமல்..! ஆனால்? தனுஷ் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் உள்ளே!

பிரபல சினிமா நடிகை சுரபி ஆடை ஏதும் அணியாமல் தலையணை சேலஞ்சில் பங்கு பெற்று தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சுரபி ஆவார். பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன்பின் பெயர் புகழ், ஜீவா போன்ற தமிழ் படங்களில் நடித்த இவர் பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகையால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த லாக்டவுன் நாட்களில் நடிகைகள் தங்களது த்ரோ பேக் வீடியோ மற்றும் புகைப்படங்களை தங்களது ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் தலையணை சேலஞ்ச் வைரலாக பரவி வருகிறது.

இந்தச் சேலஞ்சில் நடிகைகள் ஆடைகள் எதுவும் அணியாமல் தலையணையை மட்டும் வைத்து உடம்பை மறைத்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட வேண்டும். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை பாயல் ராஜ்புட் இந்த சேலத்தில் பங்குபெற்று தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்தவகையில் பிரபல தமிழ் நடிகை சுரபியும் ஆடை ஏதும் அணியாமல் தலையணையை வைத்து போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


திரைப்படங்களில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை சுரபி தற்போது ஆடை ஏதும் அணியாமல் தலையணையை வைத்து  எடுத்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.