தமிழ் சினிமாவின் தங்க மயில் ஸ்ரீதேவி! காலத்தை வென்று நிற்பவர்!

தன்னுடைய நடிப்பின் மூலம் ஜொலிக்கும் நட்சத்திரமாக திகழும் நடிகை ஸ்ரீதேவியின் 56 ஆவது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


சுமார் 100 ஆண்டுகள் ஆன சினிமா துறையில் நாயகிகளின் பட்டியலில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. தன்னுடைய விடாமுயற்சியாலும் , சிறப்பான ஈவில் டெட் நடிப்பாலும்  மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையே கொண்டவர் நடிகை ஸ்ரீதேவி. 

அந்த கால ரசிகர்கள் முதல் இந்த கால ரசிகர்கள் வரை என ஒரு மிகப்பெரிய ரசிகர் படை இவருக்கு உள்ளது எனலாம்.

1963-ம் ஆண்டு சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் ஸ்ரீதேவி. தன்னுடைய நாளாகுது வயதிலே "கந்தன் கருணை" என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 

முதல் திரைப்படத்திலேயே முருகனாக  நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் நடிகை ஸ்ரீதேவி.  இவரது மழலை கொஞ்சும் அழகான முகமானது முருகன் வேடத்துக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி அமைந்ததால்  இவர் பல திரைப்படங்களில் முருகனாக நடிக்கும்  பாக்கியத்தைப் பெற்றார்.

இதற்குப்பின் ஸ்ரீதேவி முதன்முதலாக கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான  "மூன்று முடிச்சு " எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

இதற்குப் பின் நடிகர் கமல்ஹாசனுடன் "16 வயதினிலே" திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். 

இந்த திரைப்படத்தில் மயில் என்னும் கதாபாத்திரத்தை நடிகை ஸ்ரீதேவி ஏற்று நடித்து இருப்பார். முதலில் இந்த  திரைப்படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா மயில் என்ற தலைப்புதான் வழங்கலாம் என திட்டமிட்டு இருந்தார் . ஆனால் திடீரென்று இந்த  திரைப்படத்தின் பெயர் 16 வயதினிலே என மாற்றியமைத்தார் .

ஸ்ரீ தேவி தன்னுடைய நடிப்பின் மூலம் மயில் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி மூன்று விதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 

16 வயதில் பல கனவுகளுடன் சுற்றித்திரியும் இளம் பெண்ணான மயில் , பின்பு டாக்டர் மேல் காதல் கொண்டு ஏமாந்து போகும் மயில் , கடைசியில் கமலுக்கு ஆதரவாக திரும்பும் மயிலென முப்பரிமாண நடிப்பை மிகவும் அழகாக  வெளிக்காட்டி இருந்திருப்பார் இந்த திரைப்படத்தில்.

16 வயதினிலே கமல் என்ற திரைப்படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி இந்த படத்தின் வெற்றிக்குப் பின் பல திரைப்படங்களில் கமலுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சிகப்பு ரோஜாக்கள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘மீண்டும் கோகிலா’, ‘வாழ்வே மாயம்’, ‘குரு’ என பல திரைப்படங்களில் கமலுடன் ஜோடி இணைந்து ஜோடியாக இணைந்து நடித்திருந்தார் . இவர்கள் இருவரின் நடிப்பை தமிழகமே வியந்து பாராட்டியது. 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த "மூன்றாம் பிறை " என்ற திரைப்படம் கமல் ஸ்ரீதேவி ஆகிய இருவருக்குமே ஒரு  மைல்கல்லாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸில் ஸ்ரீதேவியின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கதாகும். 

ஸ்ரீதேவியின் நடிப்பை பாராட்டும் வகையில் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள்  “ஸ்ரீதேவி போன்ற காட்டருவிகளைத் தாங்க கமலஹாசன் போன்ற கற்பாறைகள்தான் வேண்டியிருந்தது” எனக் கூறியிருந்தார். இதன்மூலம் நடிப்பில் எவ்வளவு பெரிய காட்டு அருவியாக  இவர் வாழ்ந்துள்ளார் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தை வெளிக்காட்டும் நோக்கில்  வந்த திரைப்படம் தான் ஜானி இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஸ்ரீதேவி. எப்பொழுதுமே கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பும் குழந்தைத்தனமான முகத்துடனும் நடித்திருந்த ஸ்ரீதேவி இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

ஜானி திரைப்படத்தில் பாடகியாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி ரஜினிகாந்திடம் தன் காதலை வெட்கத்துடன்  தெரிவிக்கும் காட்சிகள் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை என்றே கூறலாம். இதன் மூலம் எந்த கதாபாத்திரத்திலும் தன்னால் ஜொலிக்க முடியும் எனும் நம்பிக்கையை பல இயக்குனர் மத்தியில் விதைத்தவர் நடிகை ஸ்ரீதேவி.

இதனையடுத்து தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை என பல திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. 

நடிகர் கமல்ஹாசனை போலவே ரஜினியுடன் இவர் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக இவருக்கு அமைந்தன. 

ஆண் நடிகர்களின் ஆதிக்கம் நிறைந்த தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் , பாக்ஸ் ஆபீஸில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையும் உருவாக்கினார். 

ரஜினி கமல் ஆகியோருக்கு    வைக்கப்படும் கட்டவுட்டுக்கு நிகராக நடிகை ஸ்ரீதேவிக்கு ம் கட்டவுட்டு வைத்தார்கள் அன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள். 

80-களில் எந்தத் தமிழ் நடிகையும் பெற்றிடாத ஒரு நட்சத்திர அந்தஸ்தை நடிகை ஸ்ரீதேவி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.