பிரபல நடிகை திருமணத்துக்குப் பிறகும் இப்படியா? வைரல் வீடியோ!

நடிகை ஸ்ரேயா சரன் கடந்த 2001 ஆம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்தார்.


இதற்குப் பின் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சந்தோஷம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். இதனையடுத்து எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமில்லாமல் பாலிவுட் திரை உலகிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பின்னும் நடிகை ஸ்ரேயா சரண் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் . நடிகை ஸ்ரேயா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை.

இவர் அவ்வப்போது புதுப்புது புகைப்படங்களை பதிவு செய்து வரும் வாடிக்கை கொண்டவர். அந்த வகையில் தற்போது அவர் பார்சிலோனாவில் தன்னுடைய வீட்டு பால்கனியில் நின்று கொண்டு மழையில் வளைந்து நெளிந்து ஆடுவது போல உள்ள வீடியோ பதிவை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ரேயா பதிவிட்டுள்ளார் . இதனைப் பார்த்த ரசிகர்கள் பல வண்ணங்களில் கமெண்ட் செய்து வந்துள்ளனர். 

இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே நான்கு லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது. மேலும் நடிகை ஸ்ரேயா இது மாதிரியான வீடியோக்களை பதிவிடுவது இது ஒன்றும் புதிதல்ல. இவர் இதற்கு முன் கடற்கரையில் பிகினி உடையில் நடனம் ஆடுவது போன்ற வீடியோ பதிவை இணையத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

நடிகை ஸ்ரேயா கடைசியாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் நரகாசுரன் , சண்டகாரி தி பாஸ் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.