இந்த காலத்தில் நடிகைகள் கவர்ச்சி மட்டும் வெளிப்படுத்தி வருவதாகவும், கவர்ச்சி இல்லாமலும் சாதிக்க இயலும் வித்யாபாலன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கு அந்த நோய் இருக்கு..! அதனால் தான் உடல் எடை கூடுது..! நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

தன்னுடைய கதாபாத்திரங்களில் பெரும்பாலான அளவுக்கு கவர்ச்சியைக் உடைத்து திறமையை மட்டும் வெளிக்காட்டி வரும் நடிகைகளில் நடிகை வித்யாபாலன் முதன்மையானவர். இவர் நடிக்க வந்த புதிதில் பாலிவுட் திரையுலகில் சற்று பருமனான தோற்றமுடைய நடிகைகளால் ஜொலிக்க இயலாது என்ற கருத்து பரவி வந்தது. அதனை தன்னுடைய துணிச்சலான நடிப்பினால் தவிடுபொடியாக்கினார்.
சற்று பருமனாக இருந்தும் பாலிவுட் திரையுலகில் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் அவரளித்த பேட்டியில், "சமீபமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்கள் அனைத்து முறைகளிலும் அதிகரித்துள்ளன. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இனம் என்ற எண்ணம் பரவலாக இருந்த காலத்தில், கதாநாயகிகளை முதன்மையாக வைத்து இயக்கப்படும் படங்களும் வெற்றி அடையும் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது சகுந்தலாதேவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படத்தில் நடித்து வருகிறேன். இதற்காக அவரை போன்று என்னுடைய உடல் தோற்றத்தை மாற்றி அமைத்துள்ளேன்.
என்னுடைய சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில், என் உடல் எடை குறித்து நிறைய பேர் விமர்சனங்களை முன்வைத்தனர். எனக்கு ஏற்பட்ட அரிய வியாதியினால் எடை கூடியது. உடல் எடையை குறைக்கும் போது பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் என்னை எச்சரித்தனர். அதனால்தான் உடல் எடையை குறைக்க விருப்பமில்லை. எடை கூடினால் வாய்ப்பு வராது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன" என்று பேட்டியளித்துள்ளார்.
இந்த பேட்டியானது பாலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.