ஒரு காலத்தில் கட்டழகில் ரசிகர்களை கிறங்கடித்த சரிதா..! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் உள்ளே..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சரிதா தற்போது நடிகை ஸ்ரீபிரியா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர் நடிகை சரிதா. இவர் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். எப்போதுமே குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை கொண்ட இவர் 150 திரைப்படத்திற்கும் மேல் நடித்திருக்கிறார்.

நடிகை சரிதா தனக்கு 16 வயது இருக்கும்போது சுப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . ஆனால் திருமணம் செய்துகொண்ட ஆறே மாதங்களில் அவரை விட்டு பிரிந்து தனித்து வாழ்ந்து வந்தார். அதன் பின்பு சினிமாவில் கால் பதித்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார். நடிப்பு ஒன்றே தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்த அவர் கடந்த 1988 ஆம் ஆண்டு மலையாள நடிகரான முகேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 


திருமணம் முடிந்தவுடன் கணவர் குடும்பம் என செட்டிலாகிவிட்டார். ஆகையால் சினிமாவின் பக்கமே வராத இவர் தற்போது நடிகை ஸ்ரீபிரியா உடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறார் . அந்த புகைப்படத்தை ஸ்ரீபிரியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் . இதனை பார்த்த ரசிகர்கள் சரிதாவா இது? என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் ஒரு சிலர் நீண்ட நாட்களுக்கு பிறகு சரிதாவை பார்த்து மகிழ்ச்சி எனும் கமெண்ட் செய்து வருகின்றனர்.