கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னார்..! நம்பி முந்தி விரிச்சேன்..! இப்போது இப்படி செய்துவிட்டார்..! சினிமா பிரபலம் மீது நடிகை சொன்ன பகீர் புகார்!

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் நடித்து பிரபலமான நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடுவை போலீசார் அதிரடியாக இன்று காலை கைது செய்துள்ளனர்.


பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர் , மகேஷ் பாபுவின் போக்கிரி , அல்லு அர்ஜுனின் ஜுலாய் போன்ற திரைப்படங்கள் பணியாற்றி பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருகிறார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சாய் சுதா. திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது போலீசில் புகார் ஒன்றை அளித்து திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

சாய் சுதா ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில், ஷியாம் கே நாயுடு மீது, அதிரடியாக புகார் அளித்துள்ளார். நடிகை அளித்த அந்த புகாரில், தன்னை கட்டாயப்படுத்தி ஒளிப்பதிவாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் மேலும் தற்போது திருமணம் செய்துகொள்ள சொன்னால் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் கூறுவதாக நடிகை அந்த புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனையடுத்து நடிகை சாய் சுதா அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடுவை இன்றைய தினம் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷியாம் கே நாயுடு மூத்த ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடுவின் சகோதரர் ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.