கொழுகொழு நமீதாவா இப்படி மாறிட்டார்? அதிரவைக்கும் வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நமிதாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.


2000 களின் மத்தியில் , நடிகை நமிதா தமிழ் படங்களில் தனது கவர்ச்சியான பாத்திரங்களின் மூலம் புகழ் பெற்றார். அதற்குப்பின் சரத்குமார், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். பின்னர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை தன் வசப்படுத்தினார் .

நமிதா இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த உடனே வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். வீராவும் நமிதாவும் ஒன்றாக இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தனர். அப்போது இவர்களுக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது . பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாகவே மிகவும் கொழுகொழுவென இருந்த நமீதா தற்போது ஃபிட்னஸ் சேலஞ்சை மேற்கொண்டு மிகவும் அழகாகவும் ஒல்லியாகவும் தோன்றுகிறார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.