ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன்..! இப்போ மஞ்சு வாரியர்..! சீனியர் நடிகைகளை தேடிப்பிடிக்கும் இளம் நடிகர்!

நடிகை மஞ்சுவாரியர் உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் மலையாள நடிகர் சன்னி வெயின்.


மலையாள நடிகர் சன்னி வெய்ன் நடிகை மஞ்சு வாரியர் உடன் இணைந்து பேய் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை சாலில் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் இயக்க உள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஜிஸ் தாம்ஸ் தயாரிக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தின் பெயர் மற்றும் படக்குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சன்னி வைன் இதற்கு முன்பாக தமிழ் திரை உலகில் சீனியர் நடிகையாக வலம் வரும் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் நடித்திருந்தார். தற்போது மீண்டும் மற்றொரு சீனியர் நடிகையான மஞ்சுவாரியர் உடன் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர் ஜாக் அண்ட் ஜில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் , சோபபின், ரமேஷ் , சுராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ஜாக் அண்ட் ஜில் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.