வெடக்கோழி நடிகைகள் போதும்! நாட்டுக் கோழி நடிகை வேணும்! தனுசின் புது டேஸ்ட்!

இளம் நடிகைகளாக தேடிப்பிடித்து தன்னுடன் ஜோடி சேர்த்துக் கொண்டிருந்த நடிகர் தனுஷ் தற்போது நடுத்தர வயது நடிகை ஒருவரை தேடிப்பிடித்துள்ளார்.


கேரள நடிகைகள் மீது தனுசுக்கு எப்போதுமே ஒரு கிரேஷ் உண்டு. அதிலும் பிரேமம் படத்தில் நடித்த நடிகைகள் மூன்று பேர் மீதும் தனுசுக்கு மிகவும் விருப்பம் அதிகம். அதனால் தான் பிரேமம் படத்தில் நடித்திருந்த மடோனா செபஸ்டினை தனது பவர் பாண்டி படத்தில் தனக்கு ஜோடியாக்கினார்.

   பிறகு கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரனை கதாநாயகியாக போட்டுக் கொண்டார் தனுஷ். இறுதியாக பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அசத்திய சாய் பல்லவியை தனது மாரி 2 படத்தில் ஹீரோயினாக்கி ஒரு வழி பண்ணினார் தனுஷ்.

   இப்படி கேரளாவில் இருந்து இளம் நடிகைகளை இறக்குமதி செய்து தனக்கு ஜோடியாக நடிக்க வைத்துக் கொண்டிருந்த தனுசுக்கு போரடித்துவிட்டது போல, அதனால் தற்போது கேரளாவில் இருந்து நடுத்தர வயது நடிகை ஒருவரை தன்னுடை அசுரன் படத்தில் நடிக்க அழைத்து வந்துள்ளார்.

   அந்த நடுத்தர வயது நடிகை வேறு யாரும் இல்லை ஒரு காலத்தில் மலையாள திரையுலகையே தன் வசப்படுத்தி வைத்திருந்த மஞ்சு வாரியர் தான். நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மஞ்சு அவருடைய நடத்தை சரியில்லை என்று விவாகரத்து பெற்றார். பிறகு மீண்டும் படங்களில் மஞ்சு வாரியல் நடித்து வருகிறார்.

   மலையாளப்படங்கள் பார்க்கும் அனைவருக்குமே மஞ்சு வாரியர் மீது ஒரு கிரேஷ் இருக்கும். அந்த வகையில் தனுசுக்கும் மஞ்சு வாரியர் மேல் கிரேஷ் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும். அதனால் தான் தனது அசுரன் படத்திற்கு இன்னும் கதாநாயகியை கூட தனுஷ் இறுதி செய்யவில்லை.

  ஆனால் அதற்குள் மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளார் தனுஷ். மலையாளத்தில் முன்னணியில் இருந்த போது கூட மஞ்சு வாரியர் தமிழ் படத்தில் நடித்தது இல்லை. முன்னணி நடிகர்கள் பலர் அழைத்தும் கூட இந்த பக்கமே எட்டிப்பார்க்காதவர் மஞ்சு. ஆனால் வழக்கம் போல் தனுசுக்கு ஓ.கே சொல்லியிருக்கிறார்.