மைனா நந்தினியின் 2வது கணவன் ஆனது எப்படி? புதுக்கணவர் யோகேஷ் ராவ் வெளியிட்ட சீக்ரெட்!

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை மைனா நந்தினியின் இரண்டாவது திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்னும் தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை நந்தினி. இந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் நாளடைவில் மைனா நந்தினி என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார். மதுரை பெண்ணான நடிகை நந்தினி மதுரையில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

அதனைத் தொடர்ந்து சினிமாக்களிலும் ஒருசில கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இருப்பினும் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மூலமாக தான் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

இதனைத் தொடர்ந்து நடிகை நந்தினி பிஸியாக சீரியல்களில் நடித்து வந்தார் . பின்னர் சென்னையில் ஜிம் நடத்தி வந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது . ஆனால் திருமணமான சில நாட்களிலேயே இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ ஆரம்பித்தனர் .

இந்த பிரச்சனை காரணமாக கார்த்திக் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது . தன்னுடைய முதல் கணவரின் மறைவுக்குப் பின்னர் நடிகை மைனா நந்தினி எந்த ஒரு தொலைக்காட்சித் தொடரிலும் நடிக்காமல் திரை உலகை விட்டு சற்று தள்ளி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இணைந்து நந்தினியை மீண்டும் சினிமா துறையில் நடிப்பதற்காக அனுப்பிவைத்தனர். அதனால் இவரும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க ஆரம்பித்தார். அப்படியாக ஒரு ரியாலிட்டி ஷோவின் மூலம் பழக்கமானவர் தான் யோகேஷ் ராவ்.

முதலில் நட்பாக பழகிய அவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நந்தினியை காதலித்து வந்துள்ளார் . ஆனால் இந்த காதலை நந்தினியிடம் வெளிப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தன் வீட்டில் உள்ள பெரியவர்கள் இடத்தில் தனக்கு உள்ள விருப்பத்தைப் பற்றி கூறியிருக்கிறார். யோகேஷ் வீட்டு பெரியவர்கள் நந்தினியின் வீட்டு பெரியவர்களை சந்தித்து பேசி நந்தினியின் சம்மதத்தோடு திருமணத்தை ஏற்பாடு செய்தனர். 

ஆகையால் நந்தினி மற்றும் யோகேஷ் ஆகியோரின் திருமணம் நேற்று காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது .இதற்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை அம்பிகா , ரியோ , ஸ்ருதி , மணிமேகலை, போன்ற தொலைக்காட்சி பிரபலங்கள் நடிகர்-நடிகைகள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது