புடவையில் மயக்கிய மைனா நந்தினி..? ஆனால் அந்த இடத்தில் எதற்கு இந்த கலர்???

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி ஹேர் கலரிங் செய்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததால் மைனா நந்தினி என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சீரியல் மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெள்ளைக்கார துரை, வம்சம், வெண்ணிலா கபடி குழு, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிலும் பிரபலமானார்.

நடிகை மைனா நந்தினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார். நடிகை மைனா நந்தினி சமீபத்தில் சீரியல் நடிகர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தனது சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மைனா நந்தினி தன்னுடைய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் நடிகை மைனா நந்தினி தற்போது ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நீல நிற புடவை அணிந்து வெளியிட்டுள்ள அந்த புகைபடத்தில் நடிகை மைனா நந்தினி ஹேர் கலரிங் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் எல்லாம் ஓகே. என்ன ஹேர் கலர் இது என்று அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.