நடிகை லைலா தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கண்ணுக்குள்ள கெழுத்தி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன்களா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகில் பல வருடங்களுக்கு முன்னால் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை லைலா. இவர் பார்த்தேன் ரசித்தேன், தில், தீனா,உள்ளம் கேட்குமே போன்ற வெற்றி படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகை லைலா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை கைவிட்டார். இந்நிலையில் நடிகை லைலா தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் . இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நடிகை லைலா அன்று இருந்தது போலவே ஸ்லிம்மாகவும் அழகாகவும், இக்கால நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் உள்ளார் .
இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் நடிகை லைலா விற்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். நடிகை லைலா தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு திகில் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .