விமான நிலையத்தில் பிரபல நடிகையின் மகள்! வித்தியாசமான உடையால் வைரலாகும் புகைப்படம்!

பொதுவாகவே நடிகர்களின் குழந்தைகள் ரசிகர்களிடம் பிரபலமாவது சகஜமான ஒன்றுதான் .


அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல நடிகையான நடிகை கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் மகளான நைஸா  தேவ்கன் எப்போதும்  ரசிகர்களின் கண்களில்  படும்படி வெளியில் சுற்றி தெரிபவர்.

இவர் தற்போது சிங்கப்பூரில் படித்து வருகிறார். அவர்  தன்னுடைய தாய் நாட்டிற்கு திரும்பும் போதெல்லாம் விமான நிலையத்தில் ரசிகர்கள் கண்களில் சிக்கிக் கொள்வது வழக்கம். 

நைஸா தேவ்கன் எப்போது  வெளியே வந்தாலும்  அவரை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவரை  பிரபலம்  ஆக்குவதே ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அவரை கண்டபடி ட்ரால்  செய்வதையும் ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜய் தேவ்கன் அவர்களின் தந்தையார் இறந்த அடுத்த நாளே அவரது மகள் நைஸா தேவ்கன் தன் தாத்தா இறந்த சோகத்தில் கூட இல்லாமல்  அழகு நிலையத்திற்கு  சென்று வந்தார். அப்போது அவர் ஆரஞ்சு நிற கிராப் டாப்பும் , கார்கோ பேண்டும் அணிந்து இருந்தார்.

இந்த  புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு ஏற்றப்பட்டன.  இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இவரை கண்டபடி கமெண்ட் செய்து வந்தனர். 

சமீபத்தில் ஒரு பேட்டியில் பங்கேற்ற நடிகை கஜோல் பேசும்பொழுது என் ரசிகர்களுக்கு என்னை விமர்சனம் செய்வதற்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது . அதற்கு பதில் மாறாக என் குழந்தைகளை விமர்சனம் செய்யும் உரிமை அவர்களுக்கு கிடையாது. என்று கடிந்து கூறினார் .

இதேபோல் கஜோலின் கணவரான அஜய் தேவ்கன் தன்னுடைய மகள் நிசா தேவ்கன் முன்பெல்லாம் எவரேனும் ட்ரால் செய்தால் அதற்காக நைஸா மிகவும் வருத்தப்படுவார் . ஆனால் தற்போது அவள் அப்படி அல்ல யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கண்டு கொள்ளாத பக்குவமான  மன நிலைக்கு வந்துவிட்டாள் என்று கூறினார்.