செம்பருத்தி சீரியலில் நடித்துவரும் நடிகை ஜனனி அசோக்குமார் தற்போது ஆயுத எழுத்து என்ற புதிய சீரியலில் நடிக்கவுள்ளார்.
விஜய் டிவி புதிய சீரியல்! சரவணன் மீனாட்சி நடிகருடன் இணைந்த செம்பருத்தி ஜனனி!

உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நண்பேன்டா திரைப்படத்தில் நடித்த ஜனனி அசோக்குமார் தற்போது செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார் .செம்பருத்தி சீரியல் முக்கிய ரோலில் நடித்து வரும் ஜனனி அசோக்குமார் அடுத்து ஆய்த எழுத்து என்ற சீரியலில் நடிக்க உள்ளார்.
இந்த சீரியல் விஜய் டிவியில் விரைவில் வெளியாக உள்ளது.இதற்கான ப்ரோமோ வீடியோக்களும் விஜய் டிவியில் வெளிவந்துகொண்டிருக்கின்றன . இந்த சீரியலில் சரவணன் மீனாட்சியின் நடித்து வரும் சியாமந்தா கிரண் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் .
ஜனனி அசோக் குமார் மற்றும் சியாமந்தா கிரண் ஆகியோர் சின்னத்திரையில் ரசிகர்களிடையே தங்களின் சிறப்பான நடிப்பின் மூலம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளனர் . இவர்கள் அனைவரும் ஆயுத எழுத்து என்ற சீரியலில் இனைந்து நடிக உள்ளதால் சீரியல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.