விஜய் சார் அந்த மாதிரி சீன்ல நடிச்சார்..! மாஸ்டர் பட நடிகை உடைத்த ரகசியம்..!

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்பட காட்சிகளை பார்த்ததாகவும், எவ்வாறு ஒரு சில காட்சிகளை விஜய் சார் ஏற்று நடித்தார் என ஆச்சரியப்பட்டதாகவும் நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா கூறியுள்ளார்.


லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகவிருந்த நிலையில் தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி மாளவிகா மோகனனுக்கு டப்பிங் பேசிய ரவீனா என்பவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானார். மாஸ்டர் திரைப்படம் பற்றி கடந்த சில நாட்களாகவே எந்த அப்டேட்டும் வராத நிலையில் ரவீனா அந்த திரைப்படத்தையும் மற்றும் நடிகர் விஜய் பற்றியும் அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் மாஸ்டர் திரைப் படத்திற்கு டப்பிங் செய்யும்போது மாஸ்டர் திரைப்பட காட்சிகளை பார்த்ததாகவும், அதில் விஜய் குணாதிசயத்தால் அதிர்ச்சி அடைந்ததாகவும் ரவீனா கூறினார். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் எவ்வாறு சில காட்சிகளை ஏற்றுக் கொண்டு நடித்தார் என்று ஆச்சரியப் பட்டதாகவும் அவர் கூறினார். நிச்சயமாக இந்த திரைப்படம் வணிக படமாக மட்டும் இருக்காது எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசி வரும் ரவீனா ரவி காவல்துறை உங்கள் நண்பன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.