ஆண்ட்ரியாவுடன் உறவில் இருந்த திருமணமான நபர் யார்? வாழ்வை சீரழித்தவர் குறித்து வெளியிடப்போகும் முக்கிய தகவல்!

நடிகை ஆண்ட்ரியாவின் வாழ்வைக் கெடுத்த அந்த நபரை பற்றின உண்மைகளை நாளை வெளியிட போகிறாராம் ஆண்ட்ரியா.


சமீபத்தில் பெங்களூரில் விழா ஒன்றில் பங்கேற்ற ஆண்ட்ரியா அவர் எழுதிய "உடைந்த சிறகுகள் " என்ற புத்தகத்தில் இருந்து பல கவிதைகளை வாசித்தார். ஏன் இவ்வளவு சோகமான கவிதைகளை எழுதி உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகை ஆண்ட்ரியா , கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை ஆண்ட்ரியா திருமணமான ஒரு நபருடன் உறவில் இருந்ததாக கூறினார். மேலும் அவருடன் உறவில் ஈடுபட்டு இருந்ததை எண்ணி தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் ஆண்ட்ரியா கூறிவந்தார்.

இதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் துன்புறுத்த பட்டதாகவும் கூறினார் நடிகை ஆண்ட்ரியா. அந்த கஷ்டத்தில் இருந்து வெளிவருவதற்கான பல ஆயுர்வேத சிகிச்சைகளையும் மேற்கொண்டார். ஆண்ட்ரியாவின் கஷ்டத்தை பற்றி கேட்ட ரசிகர்கள் யார் அந்த நபர் ? யார் உங்கள் வாழ்வை சீரழித்தார் என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். அதற்கு நடிகை ஆண்ட்ரியா நீங்கள் கேட்கும் இந்த கேள்விக்கு நான் எழுதியுள்ள உடைந்த சிறகுகள் புத்தகத்தில் எல்லா பதில்களும் அடங்கியுள்ளது என்று கூறியிருக்கிறார்.

அதாவது ஆண்ட்ரியா தன்னுடைய வாழ்க்கையை பற்றி எழுதியுள்ள அந்த புத்தகத்தில் தன் வாழ்வை சீரழித்து அந்த நபரைப் பற்றியும் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட உறவைப் பற்றியும் தைரியமாக எழுதி உள்ளாராம். இந்த புத்தகத்தை அக்டோபர் 17-ஆம் தேதி சமூகவலைதளத்தில் வெளியிடப்போவதாக ஆண்ட்ரியா குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் ஆண்ட்ரியாவின் வாழ்வை சீரழித்த அந்த திருமணமான நபர் யார் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.