ஜூனியர் ஆர்டிஸ்ட் மற்றும் வளர்ந்து வரும் நடிகையுமான சுனிதா போயா பிரபல தயாரிப்பாளர் பன்னி வாஸ் தன்னை ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நா பேரு சூர்யா திரைப்படத்தை தயாரித்த கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தில் பட வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பன்னி வாஸ் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நடிகை சுனிதா போயா கூறியுள்ளார் .
பெரும் திரைப்பட தயாரிப்பாளர் மீது இளம் நடிகை பகீர் புகார்! ஆனால் நடந்தது?
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹைதராபாத் பிலிம் சேம்பர் கட்டிடத்தில் நடிகை சுனிதா அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளார். பின்னர் ஹைதராபாத் பிலிம்சேம்பர் சார்பில் அளித்த புகாரின்பேரில் நடிகை சுனிதா போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார் .
இந்நிலையில் நடிகை சுனிதா தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார் . நடிகை சுனிதா மீது 3 காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது .
மேலும் கடந்த வருடம் பட விமர்சகர் மகேஷ் கதி , நடிகை சுனிதாவிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி செய்திகள் வெளியாகியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் கதி நடிகை சுனிதா மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .