என் உடம்பு..! என் ஆசை..! என் விருப்பம்..! ஆண் நண்பர்களை மாற்றுவது குறித்து பிரபல நடிகை சொன்ன திடுக் தகவல்..!

என் உடம்பு.. என்னுடைய விருப்பம் என்னுடைய பாலியல் வாழ்க்கையை பற்றி ஏன் நீங்கள் பேசுகிறீர்கள் என சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி அதிரடியாக புதிய பதிவு வெளியிட்டு நெட்டிசன்களை விளாசி இருக்கிறார்.


நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சைக்குப் பெயர் போனவர். இவரது பெயரைக் கேட்டாலே பிரபல இயக்குனர்களும் முன்னணி நடிகர்களும் அலற கூடிய அளவிற்கு மிகப்பெரிய சர்ச்சைகளை உண்டாக்கியவர். அதாவது இவர் சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டாலே அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி ஹாட் டாபிக்காக வலம்வரும்.

இவர் வெளியிடும் புகைப்படத்தை விட அவர்கள் எழுதும் பதிவுகள் தான் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகின்றன. தனக்கு பிடிக்காதவர்கள் என்றால் ஸ்ரீரெட்டி அவர்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலம் வசை பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த விதத்தில் சமீபத்தில் பிரபல நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோரை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலம் மிகக் கடுமையாக வசை பாடி இருப்பார்.

அதுமட்டுமில்லாமல் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல இயக்குனர்கள் மீதும் நடிகர்கள் மீதும் அவர் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார். தற்போது தன்னைப் பற்றி அவதூராக கமெண்ட் செய்யும் நெட்டிசன்களையும் விலாச துவங்கி இருக்கிறார் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி. அதாவது நடிகை ஸ்ரீரெட்டி, எதற்காக என்னுடைய பேச்சில் தானாக வந்து என்னுடைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசுகிறீர்கள்? என்னுடைய உடம்பு.. என்னுடைய விருப்பம்..

தைரியமிருந்தால் நேரில் வந்து பேசுங்கள்.. அதுமட்டுமில்லாமல் எலி பொந்துக்குள் நின்று பேசாதீர்கள் எனவும் கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. மேலும் மற்றொரு பதிவில் நடிகை ஸ்ரீ ரெட்டி நான் உடை மாற்றுவதை போலவே என்னுடைய பாய் பிரண்ட்ஸ்களையும் மாற்றிக் கொண்டே இருப்பேன். எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை தூக்கி எறிந்து விடுவேன் என்று மிகவும் கேவலமாக பதிவுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

மேலும் என்னுடைய சிறிய வாழ்க்கையில், இந்த மலங்களை எல்லாம் வைத்திருக்க இயலாது. ஆகையால் தான் நான் இதை தூக்கிவீசி விடுகிறேன். ஆகையால் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நடிகை ஸ்ரீரெட்டி அந்த பதிவில் கூறியிருக்கிறார். நடிகை ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ள முகம் சுழிக்க கூடிய இந்த பதிவுகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.