கர்ப்பம் ஆகாமலேயே கணவன் மூலம் குழந்தை பெற்ற நடிகை! எப்படி தெரியுமா?

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் ஆவார். பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் ஷில்பா ஷெட்டி ஆவார்.

இவர் தமிழில் நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2007ஆம் ஆண்டு அப்பனே என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்தார் . இதுவே இவர் நடித்த கடைசி திரைப்படம் ஆகும்.

இதற்கு பின் அவர் திரைத்துறையை விட்டு விலகி விட்டார். ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ்குந்த்ரா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் 44 வயதாகும் நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். இந்த பெண் குழந்தை கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு சமிஷா என்று தம்பதியினர் பெயரிட்டுள்ளனர்.