நீலாம்பரி! சிவகாமி தேவி! நம்ம ரம்யாகிருஷ்ணனுக்கு இவ்ளோ பெரிய மகனா? வைரல் வீடியோ உள்ளே!

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனின் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதிலும் ஒரு நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. ரம்யா கிருஷ்ணன் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது நீலாம்பரி கதாபாத்திரம் என்று கூறினால் அது மிகையாகாது. அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் விதத்தில் பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி கதாபாத்திரம் மிகப்பெரிய பெயரை அவருக்கு மீண்டும் பெற்றுத் தந்தது என்று தான் கூற வேண்டும்.

இத்தகைய திறமைமிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது தன்னுடைய மகனின் பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் வம்சி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் இவர்கள் இருவருக்கும் ரித்விக் என்ற மகன் உள்ளார்.


ரம்யாகிருஷ்ணன் தன்மகன் ரித்விக்கின் பிறந்தநாளை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை அவரது கணவர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரம்யா கிருஷ்ணனின் ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.