ஒரே நேரத்தில் 3 பாட்டில்கள்..! முகத்தில் மாஸ்க்..! டாஸ்மாக் கடை முன்பு தீரன் பட நடிகை? நடந்தது என்ன?

நடிகை ரகுல் ப்ரீத் சிங், முகத்தில் மாஸ்க் உடன் கைகளில் சரக்கு பாட்டில்களை எடுத்து செல்வதாக கூறி நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.


நடிகை ராகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

நடிகர் கார்த்தியுடன் அவர் இணைந்து நடித்த தீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகை ராகுல் பிரீத் சிங் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நடிகை ராகுல் பிரீத் சிங் தன்னுடைய வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகை ராகுல் பிரீத் சிங் முகத்தில் கவசம் அணிந்து கையில் மூன்று பாட்டில்களை ஏந்தி வந்தார். சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியது. நெட்டிசன்கள் பலரும் ஒரே நேரத்தில் மூன்று பாட்டில்களுடன் நடிகை ரகுள் பிரீத் சிங் டாஸ்மாக் கடையில் இருந்து வெளியேறுவதாக கமெண்ட் செய்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ரகுல் பிரீத் சிங் புதிய ட்வீட் செய்துள்ளார். "அடடே மெடிக்கல் கடையில் ஆல்கஹால் கிடைக்கும் என்பது தெரியாமல் போயிற்றே" என்று தன்னைப் பற்றி கேவலமாக கமெண்ட் செய்த ரசிகர்கள் தலைகுனிய செய்துள்ளார். அதாவது நடிகை ரகுல் பிரீத் சிங் மருந்து கடையில் இருந்து தனக்கு தேவையான மருந்து பாட்டில்களை பெற்று வெளியேறிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவர் டாஸ்மாக்கில் சரக்கு பாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.