ஏய் வாய்ல என்னடி செஞ்ச? நடிகையின் செயலால் ஒரு நிமிடம் அதிர்ந்த இளம் கணவன்! வைரல் வீடியோ!

அமெரிக்காவில் நடைபெற்ற 77 -வது கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்ற நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவர் நிக் ஜோனஸ்க்கு லிப்லாக் அளித்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


அமெரிக்காவில் 77 வது கோல்டன் குளோப் விருது விழா நேற்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் இந்த விருது வழங்கும் விழாவில் பாலிவுட்டை சேர்ந்த பல நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர். அதேபோல் இந்திய சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவருடன் இணைந்து இந்த விழாவில் பங்கேற்று இருந்தார். இது விழாவில் பங்கேற்றபோது நடிகை பிரியங்கா சோப்ரா பிங்க் நிறத்தில் அழகிய நீளமான ஸ்ட்ராப்லெஸ் ஆடை அணிந்திருந்தார். இந்த விழாவில் பங்கேற்ற இவரை சிவப்பு கம்பளத்தில் வரவேற்றனர்.

அப்போது பிரியங்காவிடம் அவரது கணவரிடமும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் படி தொகுப்பாளர் கூறினார் . முதலில் தயங்கிய பிரியங்கா பின்னர் அதிரடியாக அவரது கணவருக்கு லிப் லாக் அளித்தார். உடனே அவர் வெட்கத்துடன் சிரித்தது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவர் நிக் ஜோனஸ் குறித்த வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.