2வது கணவருக்கு கொரோனா ஸ்பெஷல் முத்தம்..! ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்டும் சீரியல் நடிகை! யார் தெரியுமா?

கொரோனா பரவுவதைத் தடுக்க வித்தியாசமான முறையில் சின்னத்திரை நடிகை நித்யா ராம் தன் கணவருக்கு முத்தமிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தி இருக்கிறார்.


கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் பரவி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் அனைவரும் தப்பிப்பதற்காக பல விதமான யோசனைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் மிக முக்கியமாக கூறப்படுவது சோஷியல் டிஸ்டன்ஸிங் என்றழைக்கப்படும் சமூக விலகல் ஆகும்.

அதாவது இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடிப்பதும் கைகுலுக்கவும் வேண்டாமெனவும் குறிப்பிட்ட இடைவெளியுடன் பேசவும் பழகவும் அரசாங்கம் நமக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு நடிகை நித்யா ராம் தன் கணவருடன் புதுவிதமான பாணியில் முத்தங்களை பரிமாறிக் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை நித்யா ராம் கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெளியான சீரியல்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். அதிலும் தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் இன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த விட்டார்.

நடிகை நித்யா ராம் தன்னுடைய முதல் கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் அவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த கௌதம் என்பவரை இரண்டாவதாக சமீபத்தில் நடிகை நித்யா ராம் திருமணம் செய்து கொண்டார்.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம் மாதிரியாக முத்தங்களை பரிமாறிக் கொள்ளலாம் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்டர் போட்டிருக்கிறார். அதாவது நித்யாராம் மற்றும் அவரது கணவர் இருவரும் அவர்களது முகங்களில் மாஸ்க் அணிந்து கொண்டு முத்தங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.