என் அம்மாவிடம் கூறி என்னை படுக்கைக்கு அனுப்ப சொன்னார் அந்த பெரிய ஹீரோ! சினிமா அனுபவம் பகிரும் பேபி கல்யாணி!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல திரைப்படங்களில் நடித்த நடிகை கல்யாணி சினிமாவில் இருந்து ஏன் விலகினேன் என்ற அதிர்ச்சி காரணத்தை வெளியிட்டுள்ளார்.


நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தில் சதாவின் சகோதரியாக நடித்திருந்தவர் நடிகை கல்யாணி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதன் பின்பு அள்ளி தந்த வானம் என்ற திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை கல்யாணி சீரியலிலும் நடிக்க ஆரம்பித்தார்.இந்நிலையில் சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த நடிகை கல்யாணி தான் ஏன் சினிமாவை விட்டு விலகினேன் என்ற அதிர்ச்சி காரணத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப் பற்றி பேசிய அவர் நான் சீரியல்களில் நடித்து வந்தபோது ஒரு பெரிய ஹீரோ மற்றும் பெரிய தயாரிப்பாளர் கொண்ட ஒரு திரைப்படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. இதைக் கேட்ட நானும் என் அம்மாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டபோது நான் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். ஆரம்பத்தில் தேதி அட்ஜஸ்ட்மெண்ட் என்று புரிந்துகொண்ட என் அம்மாவுக்கு சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அந்த விதமான அட்ஜஸ்ட்மெண்ட் என புரிய வந்நது. இதனால் அந்த வாய்ப்பை நான் நிராகரித்து விட்டேன்.

இந்த சம்பவம் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் சினிமாவை விட்டு வெளியேற முடிவு செய்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்று நடிகை கல்யாணி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.