திருமணமான ஜோதிகா முதல் திருமணமாகாத நயன்தாரா வரை..! 5 சினிமா நடிகைகள் அந்த ஒரு விஷயத்தில் செம வீக்..! என்ன தெரியுமா?

ஜோதிகா முதல் நயன்தாரா வரை பல நடிகைகளும் பிரியாணியை தங்களுக்கு பிடித்தமான உணவாக எடுத்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.


பொதுவாகவே ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பற்றிய பல ரகசியங்களை முடிந்தவரை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். பலர் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின், காணப்படாத புகைப்படங்களை சேகரிப்பது அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை பற்றி தெரிந்து கொள்வதையும் விருப்பமாக செய்து வருகின்றனர். சிறந்த உணவை சாப்பிட்டு ருசியை அனுபவிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மகிழ்ச்சியான உணர்வை அளிக்கிறது என்றே கூறலாம். சில நேரங்களில், ஒரு சிலர் தங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்கிறார்கள். எல்லா உணவுகளை விடவும், பிரியாணி பலருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படுகிறது. மேலும் இது பல இந்தியர்களுக்கு பிடித்த முதல் மூன்று உணவுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இதேபோல் கோலிவுட் சினிமாவை சேர்ந்த ஜோதிகா முதல் நயன்தாரா வரை பல நடிகைகளுக்கும் இந்த பிரியாணியின் மீது அதிகம் ஈர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இன்றும் திரைத்துறையில் ஜொலிக்கும் நட்சத்திரமாக வலம் வரும் நடிகை ஜோதிகாவின் விருப்பமான உணவு என்றால் அது பிரியாணி தானாம். அதிலும் அவர் விரும்பி உண்பது ஹைதராபாத் பிரியாணி என்று கூறப்படுகிறது. அதை வீட்டில் சமைப்பதை அதிகம் விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். நடிகை ஜோதிகா திரைக்கு வரவிருக்கும் புதிய திரைப்படத்தில் முதல்முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ​​நடிகை காஜல் அகர்வாலையும் பிரியாணி வெகுவாக ஈர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வால் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன்2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழை தொடர்ந்து தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அதிர்ஷ்ட நாயகியாக வலம் வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. உண்மையில், பூஜா ஹெக்டேவை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் மாற்றும் ஒரு விஷயம் உணவு. இவருக்கு பிரியாணி மீது கொள்ளை பிரியம் என்று அவரே நேர்காணலில் பங்கேற்றபோது கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு,மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவருக்கும் பிரியாணியின் மீது மிகுந்த ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது. என்னதான் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள டயட்டை மேற்கொண்டாலும் ருசியான பிரியாணி என்மீது பார்க்க அதிக ஆர்வம் உள்ளதாக நடிகை தமன்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா . 

இவர் எப்பொழுதும் தன்னை பிட்டாக வைத்திருப்பதை விரும்பும் நடிகையாவார். இவருக்கு பிரியாணி மற்றும் சைனீஸ் உணவு வகைகள் மிகவும் பிடிக்கும். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.