தஞ்சை பெரிய கோவிலும் ஜோதிகாவின் மாமனாரும்..! யார் பணத்தில் கட்டியது? விஷயம் விவகாரம் ஆனது எப்படி?

கோயில் கட்டுவதை விட்டுவிட்டு மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் கட்டுங்கள் என்று கூறிய ஜோதிகாவின் பேச்சுக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.


தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பமான நடிகர் சிவகுமாரின் குடும்பத்திலுள்ள சூர்யா, ஜோதிகா, கார்த்தி என பலரும் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகின்றனர். இவர்கள் சினிமா மட்டுமல்லாமல் சமூக சேவை போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்களது சேவை மனப்பான்மையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்பு படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார்.

திரை உலகை விட்டு முழுவதுமாக விலகி இருந்த நடிகை ஜோதிகா, மீண்டும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். நடிகை ஜோதிகாவின் இந்த வளர்ச்சியை பாராட்டி JFW விருது வழங்கும் விழாவில் அவருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அந்த விருதை பெற்றுக் கொண்ட நடிகை ஜோதிகா பேசும்போது, தஞ்சை பெரிய கோவிலை கட்ட எதற்காக இவ்வளவு செலவு செய்யவேண்டும்? கோயில் உண்டியலில் காசு போடுவதைவிட பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளை கட்டலாம் என்று கூறியிருந்தார். நடிகை ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது.

இதில் ஒரு சிலர் எதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து மேக்கப் போட்டு ஆடம்பர வாழ்க்கையை வாழ்கிறீர்கள். கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து ஏன் திரைப்படங்களை தயாரிக்கிறீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல் அதற்கு பதிலாக மருத்துவமனைகளையும் பள்ளிக் கூடங்களையும் நீங்களும் கட்டி இருக்கலாமே என்று கூறியிருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் தஞ்சை பெரிய கோயில் ஒன்றும் உங்களுடைய மாமனார் கட்டியது அல்ல.. ராஜராஜ சோழன் அந்த கடவுள் மீது வைத்திருந்த பக்தியால் கட்டியது என்று ஜோதிகாவை விளாசி இருக்கிறார். இவரைப் போலவே பலரும் நடிகை ஜோதிகாவுக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். தற்போது இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.