அதிகாலை வெயில்..! சூரியனிடம் முத்தம்..! ரசிகர்களுக்கு பிரபல நடிகை கொடுத்த போஸ்!

நடிகை இலியானா தன்னுடைய விடுமுறை நாட்களை கோலாகலமாக கொண்டாடி அப்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.


தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை இலியானா. இவர் தமிழ் சினிமாவில் தேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தளபதி விஜய்யுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகை இலியானா தமிழ் சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதற்கு பதிலாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழை போலவே ஹிந்தி , தெலுங்கு என பல மொழிகளிலும் அதிக ரசிகர்களை கொண்டவர்.

நடிகை இலியானா படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் வெளி ஊர்களுக்கு சென்று புது புது இடங்களைப் பார்த்து ரசிப்பதில் வல்லவர். அப்படி அவர் சொல்லும் பொழுது அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் குணம் படைத்தவர் . அந்த வகையில் தற்போது நடிகை இலியானா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இலியானா இந்த புகைப்படத்தில் கருப்பு நிற பிகினி மற்றும் கருப்பு நிறத்தில் தொப்பியும் அணிந்து இருந்தார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு அழகாக காட்சியளிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.