வீட்டிலேயே சகோதரனுக்காக செம பார்ட்டி...! வெளியான அமலா பால் வீடியோ உள்ளே!

நடிகை அமலாபால் தன் சகோதரனின் பிறந்தநாளை தன்னந்தனியாக தன் வீட்டிலேயே ஆடி பாடி கொண்டாடிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலாபால் , ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய அழகிய நாட்களை வீட்டிலேயே தன் தாயுடன் கழித்து வருகிறார். அவ்வப்போது தன் வீட்டில் நடக்கும் அழகிய தருணங்களை ரசிகர்களோடு சமூக வலைதள பக்கங்களில் மூலமாக பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளார் நடிகை அமலாபால். சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால் தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது.

நேற்றைய தினம் நடிகை அமலாபால் தன்னுடைய சகோதரர் அபிஜித்தின் பிறந்தநாளை தன்னுடைய வீட்டிலேயே கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் நடிகை அமலாபால் தன்னந்தனியாக தன்னுடைய சகோதரனின் பிறந்தநாளை ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடிய வீடியோ பதிவினை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் தன் சகோதரருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நடிகை அமலாபாலும் அவரது சகோதரரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனைப் பார்த்த அவரது சகோதரர் அபிஜித், தன்னுடைய பிறந்தநாள் அன்று தன் சகோதரியையும் தாயையும் அதிகமாக மிஸ் செய்வதாக பதிவு வெளியிட்டிருந்தார். தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய குடும்பத்தை சந்திக்க முடியாததை அழகாக வெளிப்படுத்தி இருந்தார் அபிஜித். அமலாபாலின் சகோதரரான அபிஜித், கப்பற்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.