பிகில் ஆடியோ வெளியீட்டு விழா! ரசிகர்களுக்கு விஜய் போட்ட அதிரடி தடை! குவியும் பாராட்டு! ஏன், எதற்கு தெரியுமா?

பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ள இடத்தில் கட் அவுட்டோ பேனரோ வைக்கப்போவதில்லை என்று நடிகர் விஜயின் ரசிகர்கள் அசத்தலான முடிவை எடுத்துள்ளனர்.


நடுரோட்டில் உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் சென்னை அருகே பள்ளிக்கரனையை சேர்ந்த இளம் பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பேனர், கட் அவுட் போன்றவற்றை வைக்க கூடாது என்கிற கோரிக்கை தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் கூட பிளக்ஸ் போர்டுகள் வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படததின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் கல்லூரியில் வரும் 19ந் தேதி நடைபெற உள்ளது. வழக்கமாக விஜய் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா அந்த கல்லூரியில் நடப்பது வழக்கம்.

அப்போது காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் கல்லூரி முன்பும் கல்லூரிக்கு செல்லும் வழியிலும் கட்அவுட்டுகள் பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நடிகர் விஜயின் ரசிகர் மன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் ஈசிஆர் சரவணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் பிகில் பாடல் வெளியீட்டு விழாவிற்கு பேனர்கள் வைக்க நடிகர் விஜய் தடை விதித்துள்ளதாக சரவணன் கூறியுள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் சாய்ராம் கல்லூரி பகுதியில் கட் அவுட் பேனர் வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இதனால் இனி