என் பொண்டாட்டியுடன் பேசாதே, என் வீட்டுக்கு வராதே..! தாடி பாலாஜியை மிரட்டி இளைஞர் வெளியிட்ட வீடியோ! அதிர்ச்சி காரணம்!

தாடி பாலாஜியை ஒருவர் மிரட்டும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் தாடி பாலாஜி. இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்தார். தாடி பாலாஜி நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் போஷிகா என்று ஒரு மகளும் உள்ளார்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த இந்த தம்பதியினர் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தாடிபாலாஜி மற்றும் அவரது மனைவி நித்தியா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதையடுத்து இவர்கள் இருவரும் வாழ்வில் இணைந்து விட்டனர் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் இவர்கள் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாகவே தாடிபாலாஜி பற்றியும் அவரது மனைவி நித்யா பற்றியும் எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் தற்போது தாடி பாலாஜியை மிரட்டும் விதமாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ பதிவில் ராஜ் துரை என்பவர் பேசியிருந்தார். பேசும்போது தாடிபாலாஜி, உங்களால் தான் என் வீட்டில் இப்போது பிரச்சனை ஏற்படுகிறது. தீபாவிற்காக தான் இத்தனை நாட்களாக நான் பேசாமல் இருந்தேன். இனிமேல் என் வீட்டிற்கு வருவது அல்லது என் மனைவியிடம் பேசுவதோ கூடாது .

இதேபோல் மீண்டும் நீங்கள் செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக போலீசில் நான் புகார் அளிப்பேன் எனவும் ராஜ் துரை என்பவர் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இதற்கிடையில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருந்த தாடிபாலாஜி மனைவி நித்யா, தீபா என்பவர் யார் என்ற உண்மையை பற்றி கூறினார். அப்போது பேசிய அவர் தீபா தாடி பாலாஜியின் முதல் மனைவி ஆவார். தீபாவை திருமணம் செய்துகொண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்புதான் என்னை இரண்டாவதாக தாடி பாலாஜி திருமணம் செய்து கொண்டார்.

தீபா தான் வேண்டும் என்றால் எதற்காக என் வாழ்வில் குறுக்கிட்டு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்? பேசாமல் அவருடைய முதல் மனைவியுடன் அவர் வாழ்ந்து இருக்கலாமே கூறியிருந்தார் நித்தியா. தற்போது நித்யாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதில் அளித்துள்ளார் நடிகர் தாடி பாலாஜி.

அதாவது வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சம்பாதித்த பணத்தை பறிப்பதற்காக இந்த கும்பல் வேலை செய்கிறது எனவும் அவர் கூறியிருந்தார். இதுமட்டுமில்லாமல் நித்யாவின் நண்பர் என்று கூறிக்கொண்டு ஒருவர் தன்னை மிரட்டி வருவதாகவும் தாடிபாலாஜி குறிப்பிட்டிருந்தார்.

ஒருவேளை என்னை பயமுறுத்தி பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கில் கூட இம்மாதிரியான செயல்களில் இவர்கள் ஈடு பட்டிருக்கலாம் எனவும் தாடிபாலாஜி கூறியிருந்தார்.