விஜய் பார்க்காத எதிரிகளே இல்லை! ஆனால் விஜய் அதைப்பற்றி எல்லாம் பேசியதே இல்லை! நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்!

நடிகர் விஜய் பார்க்காத துரோகமும் இல்லை , அவர் பார்க்காத எதிரியும் இல்லை என விஜயின் நண்பரும் மற்றும் நடிகருமான சஞ்சீவ் கூறியுள்ளார் .


சில நாட்களாகவே சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு வந்தது .  நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை கலாய்க்கும் வகையில் #RIP Actor Vijay என்ற ஹேஸ்டேக் ஐ சமூக வலைதளங்களில் உண்டாக்கினர் . 

இதை கண்ட விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் #Longlive Vijay என்ற ஹேஸ்டேக் ஐ கிரியேட் செய்து சமூக வலைத்தளங்களில்  இதை  ட்ரெண்டாக்கி வருகின்றனர் .

இந்த சம்பவங்களை கண்ட நடிகர் விஜயின் நண்பர் மற்றும் சின்னத்திரை பிரபலமான நடிகர் சஞ்சீவ் ட்விட்டரில் ஒரு ட்வீட் செய்துள்ளார் .

அந்த வீட்டில் நடிகர் விஜய் பார்க்காத துரோகமும் இல்லை , அவர் பார்க்காத எதிரியும் இல்லை . அப்படி இருந்தும் நடிகர் விஜய் திரையில் இதைப்பற்றியெல்லாம்  பேசியதில்லை எனவும் நடிகர் சஞ்சீவ் ட்வீட் செய்துள்ளார் .

நடிகர் விஜய்க்கு ஆதரவாக இவர் பதிவிட்ட  கருத்துகள்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .