அடர்ந்த காட்டுக்குள் 'மேன் வெர்சஸ் வைல்ட்'..! திடீரென வலியில் துடித்த ரஜினி..! அதிர்ந்த படப்பிடிப்பு குழு..! அங்கு என்ன நடந்தது?

பிரதமர் மோடியை தொடர்ந்து ' மேன் வெர்சஸ் வைல்ட் ' நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு நிகழ்ச்சியின் ஷூட்டிங்கின் பொழுது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் வலியில் துடித்த தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் அசாத்தியமான சூழ்நிலையில் காட்டுப்பகுதியில் எவ்வாறு தப்பிப்பது மற்றும் உயிர் பிழைப்பதற்கான யுத்திகளை கற்றுத் தரும் விதமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பங்கேற்றிருக்கிறார். இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது அவருக்கு தோள்பட்டையில் சிறியதாக காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் மிகவும் வலியில் துடித்த தாகவும் கூறப்படுகிறது.

பிரபல தொலைக்காட்சியான டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்றார். அவரை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தொகுப்பாளர் பிரியர்கள் உடன் இணைந்து ரஜினிகாந்த் இரண்டு நாட்கள் தங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அடுத்து அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.