தன்னை ஹீரோவாக்கிய தயாரிப்பாளருக்கு ரூ.50 லட்சத்தில் சொந்த வீடு! சொன்ன சொல் காப்பாற்றி நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கூறியபடி தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு வீடு வாங்கி தந்துள்ளார்


தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டு விழாவை நடத்தினார். இந்தப் பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பங்கேற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் பைரவி.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளருமான கலைஞானம் தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்தை பாராட்டுவதற்காக பாரதிராஜா ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்துகொண்டார். விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்திற்கு தன் சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக கூறியிருந்தார்.

சொந்தமாக வீடு கூட இல்லாமல் இருக்கும் தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விநாயகம் தெருவில் சொந்தமாக ரூபாய் 50 லட்சம் மதிப்பு தக்க வீடு ஒன்றை வாங்கி தந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அந்த புதிய வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் கலைஞானத்திற்கு  வீடு வாங்கி தந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை அறிந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை சொன்னபடி செய்து காட்டியுள்ளார் என்று புகழ்ந்து வருகின்றனர்.