மீடியாவில் பணியாற்றும் ஆணுடன் தகாத உறவு? பிரபல நடிகரின் மனைவி குறித்து வெளியான ரகசியம்!

மீடியாவில் பணியாற்றும் ஆணுடன் தகாத உறவு வைத்துள்ளதாக கூறப்பட்ட நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா, தற்போது அது குறித்து விளக்கம் அளித்து புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது இரண்டாவது மனைவியான ஆலியா தற்போது தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். நடிகர் நவாசுதின் ஏற்கனவே ஷீபா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஆலியாவை காதலித்து இரண்டாவதாக கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

இருவருக்குமிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால் தனது கணவரை விட்டு பிரிந்து விட வேண்டும் என்று எண்ணி ஆலியா அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இதுபற்றி பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது பேசிய அவர், அதாவது இதுவரை தனது கணவர் நவாசுதீன் தன்னை அடிப்பதற்காக கை ஓங்கியது கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அண்ணன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இதுவரை நான் அவரிடமிருந்து பெறாதது அது மட்டும் தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர். அவரது தாயும் சகோதர சகோதரிகளும் எங்களுடன் மும்பையில் தங்கியிருந்தார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து நாள்தோறும் என்னை துன்புறுத்தி வந்தனர் என்று கூறி இருந்தார். 

இவர்களின் விவாகரத்து விவகாரம், பாலிவுட் திரை உலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக ஆலியா விவாகரத்து வழக்கை தொடர்ந்துள்ளார் என்று பலரும் காரணங்களைக் கேட்டு கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். அதிலும் ஒரு சிலர், அதாவது ஆலியா தன் கணவரிடம் வேலைபார்த்த வரும், மீடியாவில் பணியாற்றி வருபவருமான பியூஷ் பாண்டே உடன் நெருங்கி பழகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆலியாவின் வாட்ஸ்அப் புகைப்படங்களும் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் பேசப்பட்டது. இதையறிந்த நெட்டிசன்கள் பலரும் புதிய காதலுக்காக தான் கணவரை விவாகரத்து செய்ய உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். 

இதனையடுத்து இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆலியா தற்போது ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்றை துவங்கி இருக்கிறார். புதிதாக ட்விட்டரில் அறிமுகமான அவர், புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதாவது ஆலியா வெளியிட்டுள்ள அந்த பதிவில், எனக்கு யாருடனும் எந்த உறவும் கிடையாது.. இது குறித்து வெளியாகும் அனைத்து செய்திகளும் முற்றிலும் பொய்யானவை களாகும்.. மற்ற நபர்களை காப்பாற்றுவதற்காக என் பெயரை கெடுக்கும் செயலில் யாரும் ஈடுபடாதீர்கள். பணத்தால் ஒரு போதும் உண்மையை விலைக்கு வாங்க முடியாது எனவும் அவர் காட்டமாக பதிவை வெளியிட்டு இருக்கிறார். தற்போது ஆலியா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.