அருமை, அட்டகாசம், மாஸ், மிரட்டல், விறுவிறு, பரபர! கார்த்தியின் கைதி படம் எப்படி இருக்கு? ஒரு நேர்மையான விமர்சனம்!

படம் துவங்கியது முதல் முடியும் வரை படம் செம விறுவிறுப்பு மற்றும் பரபரப்பு என்று நம்மை பல நாட்கள் மறக்கமுடியாத வகையில் ஒரு படம் கொடுத்துள்ளனர் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ்.


மாநகரம் படம் பார்த்தவர்கள் நிச்சயமாக அந்த படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் கைதி படத்திற்கு இன்று சென்று இருப்பார்கள். காரணம் சென்னையின் பரபரப்பை மாநகரம் படம் மூலமாக விறுவிறுப்பாக கொடுத்திருப்பார். அந்த இயக்குனர் கார்த்தியுடன் இணைந்து கொடுத்துள்ள படம் தான் கைதி. 

டெல்லியாக நடித்திருக்கிறார் கார்த்தி. சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அவர் வலம் வருகிறார். படத்தின் துவக்கம் முதலே கார்த்தியின் ஆதிக்ம் தான். நம்மால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத ஒரு கேரக்டர் டெல்லி. காட்சிக்கு காட்சி எனர்ஜி. எமோசன்.

சிறையையே தன்னுடைய உள்ளங்கையில் வைத்திருக்கும் கார்த்தி திடீரென ஒரு நாள் சிறையில் இருந்து தப்பி விடுகிறார். அதன் பிறகு ஒரு நாள் இரவில் நடைபெறும் சம்பவங்கள் தான் கைதி. ஆங்கிலப்படம், ஸ்பானிஸ் படம், கொரியன் படங்களில் மட்டுமே சாத்தியமான விறுவிறுப்பு கைதியில் இருக்கிறது.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் நாம் சீட் நுனியில் வந்துவிடுகிறோம். அதன் பிறகு இடைவேளையின் போது நெஞ்சுக்கு திக் என்று இருக்கும் வகையில் ஒரு காட்சி. அதன் பிறகும் படம் படுவேகம். எந்த ஒரு காட்சியையும் நம்மால் ஊகிக்க முடியவில்லை. பாடல் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல். கதாநாயகி இல்லாததும் படத்தில்குறையாகவே தெரியவில்லை.

வசனங்கள் எல்லாம் சுளீர் ரகம். பின்னணி இசை மிரட்டல். ஒளிப்பதிவு சொல்வே வேண்டாம். அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளார் லோகேஷ் கனகராஜ். திரைப்பட காதலர்கள் அனைவரும் கட்டாயம் பார்கக் வேண்டிய படம் கைதி. தீபாவளிக்கு மிகச்சிறப்பான ட்ரீட் கொடுத்துள்ளனர் கார்த்தி – லோகேஸ் கனகராஜ் கூட்டணி.