நடிகர் ஜீவா கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஆசைஆசையாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்துக்களை புண்படுத்தும் காட்சிகள்! ஜீவாவின் 'ஜிப்ஸி' படத்துக்கு தடை!
தற்போது இவர் மாறுபட்ட கருத்துக்களை கொண்ட திரைப்படத்தை எடுத்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் நடிகர் ஜீவா நடித்து தற்போது திரைக்கு வர காத்திருக்கும் திரைப்படம் தான் ஜிப்ஸி இந்த திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழை பெறுவதற்காக இந்த திரைப்படம் இதுவரை இரண்டு முறை தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் பெற முடியாமல் திரைப்படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.
இந்த படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி உள்ளார். நாடோடிகள் வாழ்க்கை அவர்கள் மற்றும் அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இரண்டு முறை சமர்ப்பித்தும் இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற முடியவில்லை. இதற்கான காரணமாக தணிக்கை குழுவினர் கூறுவதாவது , இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன
இந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருப்பதால் இதற்கான தணிக்கை சான்றிதழை நாங்கள் தர இயலாது என்றும் கூறியுள்ளனர். ஆகவே இதனை நாங்கள் மும்பையில் உள்ள தணிக்கை குழுவினரிடம் அனுப்பி உள்ளோம் எனவும் கூறியுள்ளனர்.
இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பது மட்டுமல்லாமல் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாவை கிண்டலடிக்கும் சில காட்சிகளும் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது இவை அனைத்தும் தான் தணிக்கை சான்றிதழை பெற முடியாது அதற்கான காரணமாகும்.
மும்பையில் உள்ள தணிக்கை தீர்ப்பாயம் தீர்ப்பாயம் இந்த ஜிப்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குமா? வழங்காதா ? என்று பெரும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இதனை குறித்து எஸ் .வி. சேகர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜிப்ஸி திரைப்படத்தில் அப்படி என்ன பிரச்சினை உள்ளது ? ஏன் இருமுறை தணிக்கை சான்றிதழ் இந்த திரைப்படத்திற்கு மறுக்கப்பட்டிருக்கிறது ?என்று வினவியுள்ளார். மேலும் இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகளை காட்டுவதும் யோகி ஆதித்யாவை கிண்டலடிப்பது தான் தணிக்கை சான்றிதழ் வராததற்கு காரணமா? எனவும் பதிவிட்டுள்ளார்.