திடீரென 20 கிலோ எடை குறைந்தது..! முகம் மாறியது..! எப்படி இருந்த ஜெயராம் இப்படி ஆகிவிட்டார்..! அதிர்ச்சி காரணம்!

தமிழ் , மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகர் ஜெயராம். மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படமான பொன்னியின் செல்வன் திரை படத்தில் நடிப்பதற்காக சுமார் 20 கிலோ எடைகுறைத்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.


தற்போது ஜெயராமனின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் , மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகர் ஜெயராம். மலையாள நடிகரான இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதேவேளையில் சமஸ்கிருத மொழியில் தயாராகும் மற்றொரு திரைப்படத்திலும் நடிகர் ஜெயராம் நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மணி இயக்கும் நமோ என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயராம் குசேலன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஜெயராம் சுமார் 20 கிலோ உடல் எடையை குறைத்து இருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் தலை முடியை மொத்தமாக மொட்டை அடித்து விட்டு நடுவில் மட்டும் சற்று வைத்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எப்போதும் இளமை தோற்றத்தில் காண்போரை கவரும் வகையில் இருக்கும் ஜெயராம் திடீரென உடல் எடையை குறைத்து மொட்டை அடித்துக் கொண்டது அவருக்கு ஏதும் ஆகிவிட்டதா என்று ரசிகர்களை பதற வைத்தது.