கொரோனா பரவும் கனடாவில் சிக்கியிருக்கும் விஜய் மகன் எப்படி இருக்கிறார்? வெளியானது புகைப்படம்..!

ஊரடங்கு உத்தரவால் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருவதாக கூறப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேஸன் சஞ்சயின் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தளபதி விஜயின் மகன் ஜேஸன் சஞ்சய் கனடா நாட்டில் சிக்கி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு ஜேஸன் சஞ்சய் (வயது 20), மற்றும் திவ்யா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் சஞ்சய் சென்னையில் அமைந்திருக்கும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். 

இவர் தற்போது கனடாவிலுள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தில் ஃபிலிம் மேக்கிங் பற்றி பயின்று வருகிறார். மேலும் சஞ்சய் தனக்கு பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து அவருடைய விருப்பப்படி பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னிலையில் கனடாவிற்கு படிப்பதற்காக சென்ற சஞ்சய் கொரோனா தொற்று அங்கு வேகமாக பரவி வருவதால் அங்கேயே முடங்கி கிடக்கிறாராம்.

மேலும் சர்வதேச விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஜய் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் அவரது மனைவி சங்கீதா சோகத்தில் ஆழ்ந்து இருப்பதாகவும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியது. இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, 

 விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடா நாட்டில் நலமுடனும் மிகுந்த பாதுகாப்புடனும் இருக்கிறார் என்றும் மேலும் நடிகர் விஜய் இதைக்குறித்து கவலைப் படவில்லை எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒருவேளை இந்த புகைப்படம் கனடா நாட்டில் எடுக்கப்பட்டதா எனவும் அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.