தவசி போதையில் கார் ஓட்டினார்..! என் அப்பா சாவுக்கு அவர் தான் காரணம்! ஸ்டில்ஸ் சிவா மகன் போடும் புது குண்டு!

4 நாட்களுக்கு முன்னர் புகழ்பெற்ற கேமராமேன் பலியான சம்பவத்தில் அவருடைய ஓட்டுநரான சக நடிகர் குடிபோதையில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.


2-ஆம் தேதி இரவன்று கேமராமேன் சூப்பர் குட் சிவா தன்னுடைய படப்பிடிப்பை முடித்துள்ளார். நள்ளிரவில் குணசித்திர நடிகரும் காமெடியுமான நடிகர் தவசியின் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராவிதமாக தவசி என் கட்டுப்பாட்டிலிருந்து கார் விலகியது. எதிர்பாராவிதமாக கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் சிவா பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டிய தவசி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது காரை ஓட்டிய நடிகர் தவசிக்கு முழுவதுமாக காரை ஓட்ட தெரியாது என்பதும் அவர் மது போதையில் இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை படப்பிடிப்பு தளத்தில் இருந்த சிலர் சிவாவின் மூத்த மகனிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிவாவின் மூத்த மகன் கூறுகையில், "என்னுடைய தந்தையின் இழப்பானது எங்களால் ஈடு செய்ய முடியாததாகும். இது எங்கள் குடும்பத்திற்கு விழுந்த பெரிய அடி. அவர்தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். நான் தற்போது தான் கல்லூரி முடித்து வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளேன்.

அவர் படப்பிடிப்பிற்கு சென்றது எனக்கு தெரியாது. சென்ற பின்னரே என்னை தொடர்பு கொண்டு 6-ஆம் தேதியன்று வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தார். தந்தையின் வருகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த எங்களுக்கு அவரின் மரணச்செய்தி மட்டுமே கிடைத்தது.

மேலும் காரை ஓட்டி வந்த நடிகர் தவசிக்கு கார் ஓட்ட தெரியாது என்று யூனிட்டில் பணியாற்றியோர் என்னிடம் கூறினர். மேலும் அவர் மது போதையிலும் இருந்துள்ளார். யூனிட் காரில் சென்று இருக்க வேண்டிய என் தந்தையை வலுக்கட்டாயமாக தவசி தன்னுடைய காரில் அழைத்து சென்றுள்ளார்.

யூனிட் காரை முந்திச்செல்வதற்காக சென்ற போது அவர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. இதனால் தான் என் தந்தை உயிரிழந்துள்ளார். சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்கள் கிடைத்த பிறகு தவசியின் மீது காவல்துறையில் புகார் அளிப்போம்" என்று கூறினார்.

சிவாவின் இறுதி சடங்கானது அவருடைய சொந்த ஊரில் நடைபெற்றது. இதனால் புகழ்பெற்ற நடிகர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த சம்பவமானது சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.